நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள அரச தாதியர்கள்!!

நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள அரச தாதியர்கள்!!

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினால் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பானது இன்று (17) காலை 7.00 மணி முதல் நாளை காலை 7.00 மணி வரை முன்னெடுக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்றைய தினம் காலை 6.30 மணியளவில் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அரச தாதியர் சங்கம் இன்று பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளது.

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவுக்கும் நிதி இராஜாங்க செஹான் சேமசிங்கவுக்கும் இடையில் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்பார்த்த தீர்வு கிடைக்காத காரணத்தினால் இன்றையதினம் அரச தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுதத் ஜயசிறி தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள அரச தாதியர்கள் | Government Nurses Are On Strike Protest Employess

இந்நிலையில் ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கை மீண்டும் முன்னெடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.