கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து 6 கோடி ரூபா மோசடி!

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து 6 கோடி ரூபா மோசடி!

கனடாவில்‌ தொழில்‌ பெற்றுத்‌ தருவதாக தெரிவித்து 6 கோடி ரூபாவுக்கும்‌ அதிக பணத்தை மோசடி செய்த பெண்‌ ஒருவர்‌ வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரால்‌ கைது செய்யப்பட்டுள்ளார்‌.

பேவியகொட மீன்‌ சந்தையில்‌ வியாபாரத்தில்‌ ஈருபடும்‌ ஒருவர்‌, கனடாவில்‌ தொழில்‌ பெற்றுக்கொள்வதற்காக வத்தளையில்‌ வசிக்கும்‌ பெண்‌ ஒருவருக்கு பணம்‌ வழங்கியுள்ளார்‌. பின்னர்‌ தொழிலை பெற்றுக்கொடுக்க முடியாமல்‌ போனதாக குறித்த பெண்ணால்‌ தெரிவிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபரால்‌ முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டிற்கு அமைவாக விசாரணை அதிகாரிகளால்‌ 37 வயதான பெண்‌ கைது செய்யப்பட்டுள்ளார்‌.

இதுவரையில்‌ குறித்த பெண்ணுக்கு எதிராக 16 முறைப்பாடுகள்‌ கிடைக்கப்பெற்றுள்ளதுடன்‌, முறைப்பாருகளின்‌ பிரகாரம்‌ அவர்‌ மோசடி செய்த பணத்தின்‌ தொகை 6 கோடி ரூபாவுக்கும்‌ அதிகமென அதிகாரிகள்‌ தெரிவித்துள்ளனர்‌.

வங்கி உத்தியோகத்தர்கள்‌, சட்டத்தரணிகள்‌ மற்றும்‌ உயர்‌ தொழில்களில்‌ உள்ளவர்கள்‌ உட்பட நாட்டின்‌ பல்வேறு பகுதிகளில்‌ வசிக்கும்‌ நபர்களிடம்‌ குறித்த பெண்‌ மோசடி செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்‌ தெரிவித்துள்ளது.

செல்லுபடியாகும்‌ அனுமதிப்பத்திரம்‌ இன்றி கனேடிய தொழில்வாய்ப்புகளை பெற்றுத்தருவதாகக்‌ கூறிய குற்றச்சாட்டின்‌ பேரில்‌ கைது செய்யப்பட்ட குறித்த பெண்‌ வெலிசர நீதவான்‌ நீதிமன்றில்‌ ஆஜர்பருத்தப்பட்டதன்‌ பின்னர்‌ திங்கட்கிழமை 29.01.2024 வரை விளக்கமறியலில்‌ வைக்கப்பட்டுள்ளார்‌.