தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்! இன்றைய தங்க நிலவரம்!!
உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில், இன்றையதினம் தங்கத்தின் விலையானது வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது அதிகரித்திருந்த நிலையில் தற்போது விலையானது குறைவடைந்துள்ளது.
முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 631,470 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (24 karat gold 1 grams) 22,280 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 178,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல, 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (22 karat gold 1 grams) 20,430 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 163,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 19,500 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 156,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
செட்டியார் தெரு விபரங்கள்
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 179,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 165,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.