யாழில் இன்று ஐக்கிய அமெரிக்காவுக்கான விசா விண்ணப்பம் தொடர்பாக கலந்துரையாடல் - அனுமதி இலவசம்

யாழில் இன்று ஐக்கிய அமெரிக்காவுக்கான விசா விண்ணப்பம் தொடர்பாக கலந்துரையாடல் - அனுமதி இலவசம்

ஐக்கிய அமெரிக்காவுக்கான விசா விண்ணப்பம் தொடர்பான வழிகாட்டல்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் நடைபெறவுள்ளது.

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் இன்று 27.03.2024 மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெறவுள்ளது.

அமெரிக்க விசா விண்ணப்பம் பற்றி தகவல்களை சரியான வழிகாட்டுதல்களோடு முறையாக விண்ணப்பிப்பதற்கான விளக்கங்களை அமெரிக்க விசா அலுவலர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டு வழங்கவுள்ளனர்.

கலந்துரையாடலுக்கான அனுமதி இலவசம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.