Airplane mode: இனி இதற்காகவும் பயன்படுத்தலாம்

Airplane mode: இனி இதற்காகவும் பயன்படுத்தலாம்

விமானப் போக்குவரத்தின்போது ஸ்மார்ட் போன்களில் இருக்கும் ஏரோப்ளேன் மோடை எனபிள் செய்ய வேண்டுமென பயணிகள அறிவுறுத்தப்படுகின்றனர்.

உண்மையில் விமானப் போக்குவரத்தின்போது மட்டுமே ஏரோப்ளேன் மோட் பயன்படுத்த வேண்டும் என்றில்லை.

இந்த ஏரோப்ளேன் மோட் பல வகையிலும் எமக்கு உதவி புரிகிறது.

கவனச்சிதறலை தடுக்கிறது - ஸ்மார்ட் போனை ஏரோப்ளேன் மோடில் வைக்கும்பொழுது அழைப்புகள், குறுஞ்செய்திகள் என எதுவித கவனச்சிதறலும் இல்லாமல் வேலை செய்ய முடியும்.

மருத்துவ உபகரணங்களின் பாதுகாப்பு - மருத்துவமனைகளிலுள்ள உணர்திறனான உபகரணங்களில் குறுக்கிடதா வகையில் ஏரோப்ளேன் மோட் எனபிள் செய்யப்படும்.

நெட்வர்க் - சில நேரங்களில் ஸ்மார்ட் போன்களில் நெட்வர்க் கிடைக்காமல் இருக்கும். அப்போது ஏரோப்ளேன் மோடை ஆன் செய்து ஆஃப் செய்வதன் மூலம் நெட்வர்கள் சீராக கிடைக்கும்.

பேட்டரி - ஸ்மார்ட் போன் சிக்னலைத் தேடும்போது உங்கள் மொபைல் பேட்டரி எளிதில் காலியாகிவிடும். இதை தடுக்க வேண்டுமென்றால் ஏரோப்ளேன் மோட் உதவியாக இருக்கும்.