யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து : இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!!

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து : இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ்ப்பாணம் (Jaffna) பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளிளை செலுத்திய இளைஞன் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (16.04.2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீதியின் அருகில் நின்ற கார் வீதியை கடக்க முற்பட்ட வேளை யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து : இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி | Jaffna Motobike Accidentவிபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞன் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் (Kopay Police) இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.