மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மக்கள் வங்கியிலுள்ள வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியாகும் போலி விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

உயர்தர மாணவர்களை இலக்காகக் கொண்டு குறித்த மோசடி நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில்  மக்கள் வங்கியின் முகப்புத்தக பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உயர் தரத்தில் தேர்ச்சி பெற்ற 18 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு மக்கள் வங்கியில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும், மற்றும் முழுமையான விவரங்களை அறிய கீழே உள்ள நீல நிற இணைப்பைக் கிளிக் செய்யவும் அல்லது “Bank” என்று கமெண்ட் செய்யவும் எனக் கோரும் இந்த விளம்பரம் முற்றிலும் போலியான மோசடியாகும்.

மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | People S Bank Important Announcement For Sl Peopleஇந்த விளம்பரத்திற்கும் மக்கள் வங்கிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, இத்தகைய மோசடிக்காரர்களின் செயல்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்தோடு மக்கள் வங்கியின் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் எந்நேரமும் மக்கள் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளம், உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்குகள் மற்றும், பொது செய்தித்தாள் விளம்பரங்கள் போன்ற உத்தியோகபூர்வ ஊடகங்களில் மட்டுமே வெளியிடப்படும்.

அத்தகைய உத்தியோகபூர்வ விளம்பரங்கள் இத்தகைய மூன்றாம் தரப்பு சமூக ஊடகங்கள் அல்லது பிற தரப்பினர் மூலமாக ஒருபோதும் விளம்பரப்படுத்தப்படுவதில்லை என்பதையும் நாம் வலியுறுத்துகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.