பேருந்தில் சென்ற இளம் பெண்ணின் தலை முடியை வெட்டிய மெளலவிக்கு நேர்ந்த கதி!

பேருந்தில் சென்ற இளம் பெண்ணின் தலை முடியை வெட்டிய மெளலவிக்கு நேர்ந்த கதி!

கண்டி நோக்கி சென்ற பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்த 27 வயதுடைய இளம் பெண்ணின் தலை முடியை வெட்டிய குற்றச்சாட்டில் முருதலாவ பிரதேச பாடசாலை ஒன்றின் மௌலவி என கூறப்படும் நபரை கண்டி தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் முர்தலாவ தெஹியங்க வடக்கு பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருந்தில் சென்ற இளம் பெண்ணின் தலை முடியை வெட்டிய மெளலவிக்கு நேர்ந்த கதி! | Moulavi Cut Young Woman Hair Traveling Bus Kandy

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கட்டுகஸ்தோட்டையில் இருந்து  கண்டி நோக்கி பயணித்த பேருந்தில் குறித்த பெண் அமர்ந்திருந்த ஆசனத்தின் பின் இருக்கையில் அமர்ந்த நபர், பெண்ணின் தலைமுடியை வெட்டியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சம்பவத்தை எதிர்கொண்ட யுவதி, சந்தேக நபரையும் அவர் வெட்டிய தலைமுடியின் பகுதியையும் தனது கையடக்கத் தொலைபேசியில் காணொளியாக எடுத்துள்ளார்.

பேருந்தில் சென்ற இளம் பெண்ணின் தலை முடியை வெட்டிய மெளலவிக்கு நேர்ந்த கதி! | Moulavi Cut Young Woman Hair Traveling Bus Kandy

இச்சம்பவத்தில் மடவளை பிரதேசத்தில் வசிக்கும் யுவதியே பாதிக்கப்பட்டுள்ளார்.

யுவதி அவர் அறிவித்ததன் பிரகாரம் பயணிகள் சந்தேக நபரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.