
வணிக மத்திய நிலையமாக ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி செய்யப்படும் : ஜனாதிபதி!
சர்வதேசத்தை ஒன்றிணைக்கும் வணிக மத்திய நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்பட எதிர்பார்க்கப்பட்டுள்ள நான்கு முக்கிய நகரங்களில் ஒன்றாக ஹம்பாந்தோட்டை இணைத்துக் கொள்ளக்கடும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், குறித்த நான்கு முக்கிய நகரங்களில் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக, ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சர்வதேச சந்தையுடன் போட்டியிடும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை மையமாகக் கொண்ட ‘சி வடிவ’ பொருளாதார பயணப்பாதை ஒன்று உருவாக்கப்படுதல் அவசியம் எனவும், ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.