யாழில் உயிரிழந்துள்ள இளம் வேட்பாளர்!

யாழில் உயிரிழந்துள்ள இளம் வேட்பாளர்!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் (Jaffna) தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் இளம் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த இளம் வேட்பாளர் இன்றையதினம் (23) உயிரிழந்துள்sதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கஜன் தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணியில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினரும் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்தவரான செந்திவேல் தமிழினியன் என்ற வேட்பாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் உயிரிழந்துள்ள இளம் வேட்பாளர்! | Sudden Death Of Youth Candidate In Jaffna

குறித்த வேட்பாளரின் மறைவிற்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) தனது இரங்கலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.