
வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஒருவர் தப்பியோட்டம்
வவுனியா(Vavuniya) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் (22.03.2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த நபர் வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து கைதானவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்ட நபரே இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.
மேலும், தப்பி சென்ற குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் வவுனியா பொலிசார் ஆகியோர் மேற்கொண்டு வருகிறனர்.