அநுர அரசாங்கத்தின் மற்றுமொரு அதிரடி! முடக்கப்படும் சொத்துக்கள்

அநுர அரசாங்கத்தின் மற்றுமொரு அதிரடி! முடக்கப்படும் சொத்துக்கள்

முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் சட்டவிரோதமாக அல்லது முறையற்ற முறையில் கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய மசோதா ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார.

இந்த மசோதாவின் மூலம், நாட்டில் அரச சொத்துக்கள் மற்றும் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்யும் தனிநபர்களின் எந்தவொரு சொத்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் சட்ட பூர்வமாக கையகப்படுத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

அநுர அரசாங்கத்தின் மற்றுமொரு அதிரடி! முடக்கப்படும் சொத்துக்கள் | Government Action Freeze Illegally State Assets

இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் அவர்களது நெருங்கிய கூட்டாளிகள், உறவினர்கள், அரசியலில் உள்ளவர்கள் உட்பட நாட்டின் அரசு சொத்துக்கள், அரசு வளங்கள் மற்றும் அரசு நிதிகளை பல்வேறு வழிகளில் தவறாகப் பயன்படுத்தி கையகப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இதுபோன்ற சட்டவிரோதமான அல்லது முறையற்ற வழிகளில் சம்பாதித்து, இப்போது அவற்றைத் தங்கள் சொந்தமாக்கிக்கொண்ட எவருடைய சொத்தையும் அரசாங்கம் மீட்டெடுக்க உதவும்.

மேலும், நாட்டு மக்களின் அபிலாஷைகளை நாங்கள் நாளுக்கு நாள் நிறைவேற்றி வருகிறோம் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.