
பலூன் தொண்டையில் சிக்கி சிறுவன் மரணம்
பலூன் ஒன்றுக்கு காற்றை ஊதி, பின்னர் காற்றை வெளியேற்றிக் கொண்டிருந்தபோது 11 வயதான சிறுவன் ஒருவர் மூச்சுத் திணறி இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி நெலுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் அண்மையில் நிகழ்ந்துள்ளது.
கரியவாசம் திரான கமகே என்ற சிறுவன் பலூன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
தனது மகன் காற்றில் பலூனை ஊதி வாய்க்குள் வைத்த பிறகு, அது தொண்டையில் சிக்கிக்கொண்டதால் மூச்சுத் திணறிவிட்டதாக, சிறுவனின் தாயார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உடனடியாக சிறுவனை நெலுவ கிராமப்புற மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கு மருத்துவர்கள் தனது மகனின் தொண்டையில் இருந்த அடைப்பை அகற்றியபோதும், அவர் இறந்துவிட்டதாக தாயார் கூறியுள்ளார்.