அத்தியவாசிய உணவுப் பொருட்களின் விலை குறித்து வெளியான அறிவிப்பு

அத்தியவாசிய உணவுப் பொருட்களின் விலை குறித்து வெளியான அறிவிப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை (Consumer Affairs Authority)  வெளியிட்டுள்ளது. 

இந்த விலைப் பட்டியல்கள் வாரத்திற்கு ஒரு முறை நுகர்வோர் விவகார அதிகாரசபையால் ஊடகங்களுக்கு வெளியிடப்படுகின்றன.

இந்த வாரம் வெளியிட்ட 22 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்புகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

அதன்படி, 1 கிலோ கிராம் கோதுமை மா 145 ரூபா 170 ரூபா வரையும், வெள்ளை சீனி 218 ரூபா முதல் 240 ரூபா வரையும், பருப்பு 260 முதல் 283 வரையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தியவாசிய உணவுப் பொருட்களின் விலை குறித்து வெளியான அறிவிப்பு | Caa Releases Weekly Estimated Food Prices

அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 140 ரூபா 193 ரூபா வரையும், இந்திய வெங்காயம் 140 ரூபா 174 ரூபா வரையும், பாகிஸ்தான் வெங்காயம் 100 ரூபா 135 ரூபா வரையும் மதிப்பிடப்பட்டுள்ளது.