உச்சம் தொட்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

உச்சம் தொட்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

அந்தவகையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்றைய (17.04.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 998,722 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 35,230 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 281,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

உச்சம் தொட்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல் | Today Gold Price Chart In Sri Lanka World Market

22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 32,300 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 258,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 30,830 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 246,650 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.