சென்னை வந்த இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

சென்னை வந்த இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.

அவர் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை 10.58 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.

விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று வரவேற்றார். அப்போது அவருக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்தார். அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அங்கிருந்து கார் மூலம் போரூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து போரூர் மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான சாலையில் பிரதமர் மோடி பேரணியாக சென்றார்.

அப்போது வீதியின் இருபுறமும் கூடியிருந்த மக்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். உடனே பிரதமர் மோடி காரில் நின்றபடி மக்களுக்கு கை அசைத்தார்.

தமிழக பா.ஜனதா சார்பில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பட்டது. பிரதமர் மோடியின் வாகனத்துக்கு பின்னால் முதல்-அமைச்சர் விஜய் காரில் சென்றார்.