
அதிர வைக்கும் தங்கத்தின் விலை...! வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
அந்தவகையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்றைய (18.04.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 998,722 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 34,490 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 281,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல, 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 32,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 258,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 30,830 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 246,650 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்திய வரிகளால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு மத்தியில், உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் இந்திய மக்கள் தங்க நகைகளை வாங்குவது குறைந்துள்ளதாக இந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்கு பதிலாக அவர்கள் தங்கள் பழைய தங்க நகைகளை புதிய தங்க நகைகளாக மாற்றி வருவதாக கூறப்பட்டுள்ளது.