உரத்தின் விலையை உயரத்தியுள்ள அநுர அரசு : விவசாயிகள் விசனம்

உரத்தின் விலையை உயரத்தியுள்ள அநுர அரசு : விவசாயிகள் விசனம்

இந்த வருடம் சிறுபோகம் தொடங்கியிருந்தும் கூட அரசாங்கம் உரத்தின் விலையை உயர்த்தியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

முந்தைய பருவத்துடன் ஒப்பிடும்போது, ​​விவசாயத்திற்குத் தேவையான நெல்லின் விலை இந்த பருவத்தில் 1,100 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதாக எலஹெரா இயக்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன் 2025 சிறுபோகத்தில் நெல் பயிரச்செய்கை தொடங்குவதில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்வதாக பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடந்த சில நாட்களாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், நெல் பயிர்ச்செய்கைக்குத் தேவையான உர மானியத் தொகை முறையாக வங்கியில் சேர்க்கப்படவில்லை என்பது விவசாயிகள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினை என குறிப்பிடப்பட்டுள்ளது.

உரத்தின் விலையை உயரத்தியுள்ள அநுர அரசு : விவசாயிகள் விசனம் | Farmers Accuse Govt Of Raising Fertilizer Prices

இதேவேளை, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் விவசாய மேம்பாட்டிற்காக 750 மில்லியன் டொலர்களுக்கு மேலாக வெளிநாட்டு உதவியாகப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

குறித்த திட்டங்களுக்கு முறையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் (Anuradha Tennakoon) நேற்று (30) விவசாய அமைச்சிற்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.