யாழில்10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை படுத்திய வயோதிபர்

யாழில்10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை படுத்திய வயோதிபர்

யாழ்ப்பாணம் வேலணை துறையூர் பகுதியில் 10 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய குற்றச்சாட்டில் 62 வயது நபர் ஒருவர் இன்று (25) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் கடந்த சனிக்கிழமை (ஜூலை 19) அன்று இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுமி வீட்டிற்குத் தேவையான "யூஸ்" பொருளை வாங்கச் சென்றபோது, கடையின் உரிமையாளர் சிறுமியை உள்ளே அழைத்து, பொருளை எடுத்துத் தருமாறு கூறியுள்ளார்.

யாழில்10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை படுத்திய வயோதிபர் | 62 Year Old Man Arrested Sexually 10 Girl Jaffna

இதைத் தொடர்ந்து, அந்த நபர் சிறுமியை கட்டியணைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு வந்து தாயாரிடம் சம்பவத்தை தெரிவித்தபோதிலும், சமூக அழுத்தம் மற்றும் அச்சம் காரணமாக, முதலில் முறைப்பாடு செய்ய தயங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர், சமூக நலன்விரும்பிகள் மற்றும் கிராமசேவகர் மூலமாக அதிகாரப்பூர்வ முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் சிறுவர் நன்நடத்தை அலுவலகத்திற்கும், பின்னர் ஊர்காவற்றுறை காவல் நிலையத்திற்கும் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேக நபர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை நீதிமன்றில் முன்வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.