யாழில் வீடொன்றினுள் இருந்து சடலம் மீட்பு!

யாழில் வீடொன்றினுள் இருந்து சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அயலவர்கள் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

மேலதிக விசாரணை

இந்தநிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் ஓரிரு தினங்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் வீடொன்றினுள் இருந்து சடலம் மீட்பு! | Body Recovered From Inside A House In Jaffna 

உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவை தொடர்பில் தெரிவிக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.