
மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் பலி; யாழில் துயரம்
யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஏழாலை பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் தனது வீட்டில் மர அரிவு நிலையத்தை நடாத்தி வந்துள்ளார்.
இந் நிலையில், நேற்றைய தினம் வழமை போன்று மர அரிவு வேலையில் ஈடுபட்டிருந்த போது தவறி இயந்திரத்தின் மேல் விழுந்ததில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025