கொழும்பு தமிழ் மாணவி மரணத்தின் ஆசாமி தொடர்பில் அம்பலமான தகவல்

கொழும்பு தமிழ் மாணவி மரணத்தின் ஆசாமி தொடர்பில் அம்பலமான தகவல்

  கொழும்பில் தமிழ் பாடசாலை மாணவியை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர் தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் வெளியான தகவல்களின் படி,

கொழும்பு தமிழ் மாணவி மரணத்தின் ஆசாமி தொடர்பில் அம்பலமான தகவல் | Information Death Of A Tamil Student In Colombo

கொழும்பில் வசித்து வந்த யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த ஆங்கில ஆசிரியையான பெண்மணி ஒருவருக்கு  சொந்தமான கொழும்பில் அமைந்துள்ள  கல்வி நிலையத்தினை முழுமையாக விழுங்கியவரே மாணவியின் மரணத்திற்கும் காரணமானவர் என கூறப்படுகின்றது.

புங்குடுதீவு பெண்மணிக்கு ஒரு மகள் மாத்திரமே இருந்ததால் இந்த நபர் வளர்ப்பு பிள்ளை போன்று பராமரிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மகள் அவுஸ்ரேலியாவுக்கு சென்ற பின்னர் புங்குடுதீவு ஆசிரியையின் முதுமையை பயன்படுத்தி கல்வி நிலையத்தின் உடைமைகள் குறித்த நபருக்கு   கைமாற்றப்பட்டிருந்தன .

இந்நிலையில்  ஜனாதிபதி ஆகிய அநுரகுமார திசாநாயக்கவின் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக குறித்த நபர் நியமிக்கப்பட்டபோதே கொழும்பு வாழ் தமிழர்கள் மத்தியில் இவ்வாறான ஒரு ஆசாமியை ஜேவிபி தலைமை தெரிவு செய்தமை தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருதன.

எனினும் தேர்தலில் திசைகாட்டி பாரிய வெற்றிகளை பெற்றிருந்த போதிலும் இந்நபர் படுதோல்வி அடைந்திருந்தார். இந்நிலையில் மாணவியின் மரணத்தின் பின்னரே குறித்த நபரின் மோசமான பக்கங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளது.

இதேபோன்றுதான் யாழ் மாவட்டத்திலும் நாடாளுமன்ற தேர்தலிலும் , உள்ளூராட்சித் தேர்தலில் பெரும்பாலான சமூக விரோதிகள் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிட்டு சிலர் வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள் எனவும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.