
கனடாவாழ் இளம் குடும்பஸ்தருக்கு தாயகத்தில் நேர்ந்த நிலை; திடீரென தலைமறைவு!
கனடாவிலிருந்து வந்த இளம் வயதான குடும்பஸ்தர் ஒருவர் வவுனியாவில் இளம் யுவதி ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவால் 35 லட்சம் ரூபா பணத்தை தாரை வார்த்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த வருட நடுப்பகுதியில் கனடாவிலிருந்து வந்த நபர் வவுனியாவில் பல ஏக்கர் காணி வாங்கி அதில் பண்ணை ஆரம்பிக்கும் நடவடிக்கையை தொடங்கியிருந்தார்
இதன்போது காணியை துப்பரவு செய்வதற்காக பலரை வேலைக்கு அமர்த்திய நிலையில் அப்பகுதியில் உள்ள கணவனை இழந்த குடும்பப் பெண் ஒருவருடன் குடும்பஸ்தருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பெண்ணின் மகளான 17 வயது யுவதியுடன் கனடா குடும்பஸ்தர் உறவில் இருந்த நிலையில் யுவதி கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து யுவதியின் தாயார் கனடாவாழ் நபரிடம், மகளுடன் ஏற்பட்ட தொடர்பை பொலிசாரிடம் முறையிடப் போவதாகவும் அச்சுறுத்தி பெருமளவு பணம் கேட்டு தொல்லைப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது.
பொலிசாரிடம் சென்றால் என்ன ஆகுமோ என பயந்த கனடாவாழ் குடும்பஸ்தர் 35 லட்சம் ரூபா பணம் வழங்கியதாக தெரியவருகின்றது. இந் நிலையில் யுவதி ஓரிரு மாதங்களுக்கு முன் தனது காதலனை பதிவுத் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார்.
இதனையறிந்து அதிர்ச்சியடைந்த கனடா குடும்பஸ்தர் யுவதியின் தாயாருடன் முரண்பட்டு பொலிசாரிடம் முறையிடப் போவதாக யுவதியின் தாயாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து யுவதியின் கணவன் கனடா குடும்பஸ்தரின் பண்ணைக்கு வந்து தாக்கியதாகத் தெரிவருகின்றது. அந்த சம்பவத்தின் பின் கனடா குடும்பஸ்தர் பண்ணையிலிருந்து தலைமறைவாகி கனடா சென்றுவிட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.