இந்தியவில் கொரோனாவால் இளைஞர் பலி ; சடுதியாக அதிகரிக்கும் நோயாளர் எண்ணிக்கை

இந்தியவில் கொரோனாவால் இளைஞர் பலி ; சடுதியாக அதிகரிக்கும் நோயாளர் எண்ணிக்கை

தமிழகத்தில் சேலம் அரசு வைத்தியசாலையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த இளைஞர் கொரோனா பாதிப்புடன் இருந்த நிலையில், சிறுநீரகம், நுரையீரல் பாதிப்பும் அவரது உயிரிழப்புக்கு காரணம் என தமிழக சுகாதாரத்துறை தகவல் வௌியிட்டுள்ளது.

இந்தியவில் கொரோனாவால் இளைஞர் பலி ; சடுதியாக அதிகரிக்கும் நோயாளர் எண்ணிக்கை | Youth Dies Of Covid 19 In India

இந்த சூழலில் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டுமென தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதிகபட்சமாக கேரளாவில் 1,147 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மராட்டியத்தில் 424, டெல்லி 294, குஜராத் 223, தமிழ்நாடு 148, கர்நாடாகா 148, மற்றும் மேற்கு வங்காளத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 26-ஆம் திகதி 1,010 ஆக இருந்த கொரோனா பாதிப்பு அடுத்த 4 நாட்களில் இருமடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.