வெளிநாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

வெளிநாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது இன்று(28) 6.1 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.

டாவோ ஆக்ஸிடென்டல் மாகாணத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் 101 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சுனாமி குறித்து எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளிநாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் | Earthquake Southern Philippines Coast

இதேவேளை,  கடந்த 24 ஆம் திகதி தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.