தங்க நகைக்காக படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்

தங்க நகைக்காக படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்

இரத்தினபுரியில் தங்க சங்கிலிக்காக இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குருவிட்ட, தேவிபஹல - தொடன்எல்ல வீதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பெண்ணின் கழுத்து பகுதியில் கத்தியால் குத்திவிட்டு, அவரது தங்க சங்கிலியை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

கத்திக்குத்து காயங்களுடன் சரிந்து விழுந்த பெண், இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்க நகைக்காக படுகொலை செய்யப்பட்ட இளம் பெண் | Chain Snatching Women Killed In Sri Lanka

சம்பவத்தில் உயிரிழந்தவர் குருவிட்ட, தேவிபஹல பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தலைமறைவான சந்தேக நபரை கைது செய்ய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக குருவிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.