யாழில் விபரீத செயலால் பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர் ; குடும்பத்தினருக்கு விழுந்த பேரிடி

யாழில் விபரீத செயலால் பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர் ; குடும்பத்தினருக்கு விழுந்த பேரிடி

யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (08) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீர்வேலி - அச்செழு சூரசிட்டி பகுதியை சேர்ந்த 28 வயது என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் விபரீத செயலால் பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர் ; குடும்பத்தினருக்கு விழுந்த பேரிடி | Young Family Man S Tragic Act In Jaffna

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கும் அவரது மனைவிக்குமிடையே கடந்த 2ஆம் திகதி முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மனைவியை தாக்கியுள்ளார்.

இதனால் காயமடைந்த மனைவி கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 4ஆம் திகதி வீடு திரும்பிய நிலையில் தாயார் வீட்டிற்கு சென்று அங்கிருந்துள்ளார்.

இதனால் மன விரக்தியடைந்த கணவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகள், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.