
வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - வௌியான விசேட அறிவிப்பு
நாட்டின் வானிலை நிலைமைகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் சாத்தியம் காணப்படுவதால், நாளை (18) முதல் அடுத்த சில நாட்களில், குறிப்பாக மத்திய மலைகளின் மேற்கு சரிவுப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதேவேளை, அடுத்தடுத்த வானிலை முன்னறிவிப்புகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.