உலகில் அதிக வாகன விலையை கொண்ட நாடுகள் - இலங்கைக்கு கிடைத்த இடம்

உலகில் அதிக வாகன விலையை கொண்ட நாடுகள் - இலங்கைக்கு கிடைத்த இடம்

2021 ஆம் ஆண்டில் வாகனக் கொள்வனவில் உலகின் மூன்றாவது அதிக விலையை கொண்ட நாடாக இலங்கை (Srilanka) தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.

உலக வங்கியின் வாகன விலை நிலை குறியீட்டில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறியீட்டில் இலங்கையின் மதிப்பெண் 175 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது வாகன விலைகள் உலகளாவிய சராசரி அளவுகோலான 100 ஐ விட இலங்கையில் விலை 1.75 மடங்கு அதிகமாகும்.

உலகில் அதிக வாகன விலையை கொண்ட நாடுகள் - இலங்கைக்கு கிடைத்த இடம் | Most Expensive Cars In The World In 2025 List

இதில் சிங்கப்பூர் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் முதல் 2 இடங்களில் உள்ளன.  

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தற்போது 300 சதவீத வரி விதிக்கப்படுவதுடன் உள்ளூர் மறுவிற்பனை சந்தை விலைகள் அதிகரித்துள்ளது.

மேலும் இலங்கை மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே பல வருட பயன்பாட்டிற்குப் பிறகும், வாங்கிய விலையை விட அதிக விலைக்கு வாகனங்களை விற்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.