விரைவில் தூங்கா நகரமாக மாற்றப்படவுள்ள கண்டி

விரைவில் தூங்கா நகரமாக மாற்றப்படவுள்ள கண்டி

கண்டி நகரத்தை இரவிலும் செயல்படும் நகரமாக மாற்றி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டம் இந்த மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்டியில் உள்ள முக்கிய ஹோட்டல்கள், பிற வணிக நிறுவனங்கள், கலாசார மையங்கள், விளையாட்டு போன்ற பல கூறுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், கண்டியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இரவில் தக்க வைத்துக் கொள்வதாகும் என கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் கண்டியில் உள்ள தலதா வீதி மற்றும் கொட்டுகொடெல்ல வீதியில் கட்டப்பட்ட தற்காலிக கடைகளில் வணிக நிறுவனங்கள் கடைகளை நடத்த அனுமதிக்கும், மேலும் அந்த கடைகள் முதல் இரண்டு வாரங்கள் இலவசமாக வழங்கப்படும்.

விரைவில் தூங்கா நகரமாக மாற்றப்படவுள்ள கண்டி | Kandy Breeze Night Tourist Srilanka

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் தெரிவிக்கையில், மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம், மத்திய மாகாண சபை மற்றும் கண்டி மாநகர சபை உட்பட கண்டியில் உள்ள அனைத்து வர்த்தக சங்கங்களின் பங்கேற்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்த திட்டத்திற்கு இணையாக, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் சிறப்பு பேருந்து சேவையும் நள்ளிரவு 12.00 மணி வரை இயங்கும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

(kandy breeze night) என்ற பெயரில் இந்த திட்டம் ஒவ்வொரு வார இறுதியிலும் செயல்படுத்தப்படும் என்று ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.