யாழில் தனது சொந்த நிலத்திலேயே பலியான குடும்பஸ்தர் ; சோகத்தில் தவிக்கும் குடும்பம்
தனது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்சார வேலியின் மின்சாரத்தால் தாக்கப்பட்டு 64 வயதுடைய கிளானை கொல்லங்கலட்டியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே நேற்று (30) இரவு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காங்கேசந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.