பிரித்தானியாவில் இலங்கை தமிழ் தம்பதி நாட்டைவிட்டு ஓட்டம்!

பிரித்தானியாவில் இலங்கை தமிழ் தம்பதி நாட்டைவிட்டு ஓட்டம்!

பிரித்தானியாவில்  பிரபல எண்ணெய் நிறுவனத்தை நடத்தி வந்த இலங்கை  தமிழ் தம்பதி நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தம்பதி இணைந்து   பிரிட்டனில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைத் தொடங்கினர். இதன் மூலம் பில்லியன் கணக்கான பவுண்டுகளைப் பணப் பரிவர்த்தனை செய்து வந்தனர்.

பிரித்தானியாவில் இலங்கை தமிழ் தம்பதி நாட்டைவிட்டு ஓட்டம்! | Sri Lankan Tamil Couple Prax Group Insolvency Ukஇந்நிலையில் குறித்த  நிறுவனம் தற்போது திவாலாகும் நிலைக்கு சென்றுள்ளதாக  கூறப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக, நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, நிறுவனத்தைக் கைவிட்டு நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.  இவர்களது நிறுவனம் சுமார் 1.5 பில்லியன் பவுண்டுகள் கடனில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நாட்டை விட்டு  தப்பியோடிய  இலங்கை தமிழ்  தம்பதியை  பிரித்தானியப் போலீசார்   தீவிரமாகத் தேடி வருகின்றதாக  பிரித்தானிய  தகவல்கள் தெரிவிக்கின்றன.