சொந்த மகளையே கர்ப்பமாக்கிய தந்தை ; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

சொந்த மகளையே கர்ப்பமாக்கிய தந்தை ; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், பிரியப்பட்டணா தாலுகாவில் உள்ள பெட்டதபுரா பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக அவள் வயிற்று வலியால் அவதிப்பட்டதால், அவளது தாய் அவளை பிரியப்பட்டணா அரசு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார்.

சொந்த மகளையே கர்ப்பமாக்கிய தந்தை ; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் | Sexual Assault By Father

அங்கு வைத்தியர்கள் அவளைப் பரிசோதித்தபோது, அவள் 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து அவளது தாயிடம் தெரிவித்தனர்.

அதைக் கேட்டு அவளது தாய் அதிர்ச்சியடைந்து அழுதார்.பின்னர், வைத்தியர்களும் அவளது தாயும் சிறுமியிடம் விசாரித்தபோது, அவள் கண்ணீர் மல்க தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தாள்.

கடந்த ஒரு ஆண்டாக அவளது தந்தையே அவளை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதனால் வைத்தியர்களும் அவளது தாயும் ஆத்திரமடைந்தனர்.பின்னர், வைத்தியர்கள் இதுகுறித்து பெட்டதபுரா பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

பொலிஸார் வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தி, அவளது தந்தையை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.