யாழ். வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம் ; ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!

யாழ். வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம் ; ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று 21ஆம் திகதி ஞாயிறுக்கிழமை காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலமையிலான குருமார் திருவிழா கிரியைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந் திருவிழாவில்  22ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 7ஆம் திருவிழாவான 27 ஆம் திகதி வரை உள்வீதியுலாவும், 28ஆம் திகதி வெளிவீதியில் ஞாயிறுக்கிழமை குருக்கட்டு விநாயகர் தரிசனமும், 29 திங்கட்கிழமை வெண்ணைத் திருவிழாவும்,

யாழ். வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம் ; ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி! | Jaffna Vallipura Temple Grand Festival Tomorrow

30 செவ்வாய்க்கிழமை துகில் திருவிழாவும், 01.10 புதன்கிழமை பாம்பு திருவிழாவும், 02.10 வியாழக்கிழமை கம்சன் போர் திருவிழாவும், 03.10 வெள்ளிக்கிழமை வேட்டை திருவிழாவும், 04.10 சனிக்கிழமை சப்பறத்திருவிழாவும், 05.10 ஞாயிறுக்கிழமை தேர்த்திருவிழாவும்,

06.10 திங்கட்கிழமை சமுத்திர தீர்த்த திருவிழாவும், 07.10 செவ்வாய்க்கிழமை பட்டுத்தீர்த்த திருவிழாவும், 08.10 ஆஞ்சநேயர்மடையும் இடம்பெறவுள்ளது.

திருவிழாவிற்க்கான சுகாதார வசதிகளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், பருத்தித்துறை பிரதேச சபையும் மேற்கொண்டுள்ளதுடன், நிர்வாக ஒழுங்குகளை பருத்தித்துறை நீதிமன்ற பதிவாளர் அவர்கள் தலைமையிலும்,

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் ஏனைய பணிகளையும் மேற்கொண்டுள்ளதுடன் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.