யாழில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி

யாழில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி

யாழில் (Jaffna) முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வேக கட்டுப்பாட்டை இழந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

யாழில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி | Auto Driver Injured In Jaffna Road Mishap

இதையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.