யாழில் வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
யாழ்ப்பாணத்தில் வேலை வாய்ப்புகளை வழங்குதல் தொடர்பாக தொழிலாளர் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவைகள் வாரம் ஆரம்பமாகவுள்ளது.
தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) தலைமையில் இன்று (22.09.2025) காலை 9.00 மணிக்கு இதன் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நடமாடும் சேவைகள் வாரத்தை நாடு முழுவதும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஊழியர் சேமலாப நிதி உறுப்பினர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது, வேலை வாய்ப்பு கண்காட்சிகள் மூலம் வேலைவாய்ப்புகளை வழங்குதல்.

மற்றும் சட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் உள்ளிட்ட தொழிலாளர் அமைச்சகத்திற்குச் சொந்தமான பல சேவைகளை பெற முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனைத்து அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முடிவு செய்துள்ளார்.
மேலும் சம்பள உயர்வு அடுத்த ஜனவரியில் செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.