இந்தியாவிலிருந்து நூதன முறையில் தங்கம் கடத்திய பெண் - யாழ். விமான நிலையத்தில் சம்பவம்

இந்தியாவிலிருந்து நூதன முறையில் தங்கம் கடத்திய பெண் - யாழ். விமான நிலையத்தில் சம்பவம்

யாழ் (Jaffna) பலாலி விமான நிலையம் ஊடாக பெண்ணொருவர் உடலில் மறைத்து தங்கம் கடத்தியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.

கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தங்கம் கடத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இந்தியாவில் இருந்து உடலில் மறைத்து தங்கம் கொண்டு வந்துள்ளார்.

இந்தியாவிலிருந்து நூதன முறையில் தங்கம் கடத்திய பெண் - யாழ். விமான நிலையத்தில் சம்பவம் | Gold Smuggling At Jaffna International Airport

இந்தநிலையில், யாழ். பலாலி விமான நிலைய அதிகாரிகளின் சோதனையில் ஈடுபட்டபோது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்பு, கடத்தலில் ஈடுபட்ட பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து நூதன முறையில் தங்கம் கடத்திய பெண் - யாழ். விமான நிலையத்தில் சம்பவம் | Gold Smuggling At Jaffna International Airport

இதையடுத்து, அங்கு குறித்த பெண்ணிற்கு சிகிச்சையளிக்கப்பட்டு பின் தங்கம் மீட்டு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.