யாழில் நேர்ந்த சோக சம்பவம் ; பிறந்து 45 நிமிடத்திலேயே உயிரிழந்த இரட்டை குழந்தைகள்

யாழில் நேர்ந்த சோக சம்பவம் ; பிறந்து 45 நிமிடத்திலேயே உயிரிழந்த இரட்டை குழந்தைகள்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பிறந்த இரட்டை குழந்தைகள் சிறிது நேரத்திலேயே  உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த குழந்தைகளின் பெற்றோர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த குழந்தைகளின் தாயாருக்கு கடந்த 21ஆம் திகதி இரவு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.

யாழில் நேர்ந்த சோக சம்பவம் ; பிறந்து 45 நிமிடத்திலேயே உயிரிழந்த இரட்டை குழந்தைகள் | Twin Babies Die 45 Minutes After Birth In Jaffna

இதையடுத்து, அவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதன்பின்பு, அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்த நிலையில், பெண் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

அத்தோடு, ஆண் குழந்தை உயிருடன் பிறந்த நிலையில் 45 நிமிடங்கள் கழித்து உயிரிழந்துள்ளது.

குழந்தைகளின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.