யாழில் பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி இறக்கத்துடன் இடமாற்றம்

யாழில் பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி இறக்கத்துடன் இடமாற்றம்

 யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றி வந்த சிலருக்கு, பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகளுக்கே இவ்வாறு பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

யாழில் பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி இறக்கத்துடன் இடமாற்றம் | Jaffna Police Officers Transferred With Demotion

குறித்த பொறுப்பதிகாரிகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.