10 பில்லியனை தாண்டிய மதுவரி நிலுவைகள் ; அரசு கடும் நடவடிக்கை

10 பில்லியனை தாண்டிய மதுவரி நிலுவைகள் ; அரசு கடும் நடவடிக்கை

மதுவரித் திணைக்களத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய நிலுவையில் உள்ள மதுவரி மற்றும் அபராதத் தொகைகள் 10 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.

பிரதி அமைச்சர் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

10 பில்லியனை தாண்டிய மதுவரி நிலுவைகள் ; அரசு கடும் நடவடிக்கை | Excise Tax Arrears Exceed 10 Billion Gove Action

இதன்போது, 90 நாட்களுக்கு மேலாக வரி நிலுவை வைத்துள்ள உற்பத்தியாளர்களின் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நிலுவையில் உள்ள மதுவரித் தொகை 4.7 பில்லியன் ரூபா எனவும், நிலுவைத் தொகைக்கான 3வீத அபராதத் தொகை 5.8 பில்லியன் ரூபா எனவும், மூலப்பொருட்கள் மீது அறவிடப்பட வேண்டிய நிலுவை மதுவரித் தொகை 223 மில்லியன் ரூபா எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.