பொலிஸ் அதிகாரியின் உயிரை பறித்த இராணுவப் பேருந்து

பொலிஸ் அதிகாரியின் உயிரை பறித்த இராணுவப் பேருந்து

வெல்லவாய பொலிஸ் பிரிவின் வெல்லவாய-தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் வெல்லவாய, ராஜமாவத்தையைச் சேர்ந்த 36 வயதான பொலிஸ் சார்ஜென்ட் என தெரியவந்துள்ளது.

பொலிஸ் அதிகாரியின் உயிரை பறித்த இராணுவப் பேருந்து | Army Bus Turns Deadly For Police Officer

தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற இராணுவப் பேருந்தும் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

சடலம் வெல்லவாய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.