பெண் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு படுகொலை
காலி, அஹுங்கல்ல பொலிஸ் பிரிவின் பாத்தேகம பகுதியில் பெண் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் பெண்ணை கல்லால் தாக்கியுள்ளார்.
அதனால் பலத்த காயமடைந்த பெண், பலபிட்டிய மருத்துவமனையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் பாத்தேகம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் உயிரிழந்த பெண்ணின் உறவினர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலையின் பின்னர் சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்