உயர்தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை! வெளியானது அறிவிப்பு
20205 க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் 4 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில், நவம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சை டிசம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதன்போது, 2362 பரீசை மையங்களில் பரீட்சை நடைபெறும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது