கடும் நெருக்கடியில் இலங்கை மின்சார சபை: வெளியான தகவல்

கடும் நெருக்கடியில் இலங்கை மின்சார சபை: வெளியான தகவல்

இலங்கை மின்சாரசபை அனர்த்தநிலை காரணமாக சுமார் 20 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும், தடைப்பட்ட மின்சார விநியோகத்தில் 99 சதவீதம் தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் பிரதி முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்

அனர்த்தத்தின் விளைவாக, பல மின்சார நுகர்வோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும்,சேதமடைந்த அனைத்து மின்மாற்றி அமைப்புகளும் தற்போது முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடும் நெருக்கடியில் இலங்கை மின்சார சபை: வெளியான தகவல் | Announcement From The Sri Lanka Electricity Board

அனர்த்த நிலைமை காரணமாக நாடு முழுவதும் பதிவான மொத்த மின் தடைகளின் எண்ணிக்கை சுமார் 4.1 மில்லியனாக பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.v