இரு கிழமைகளில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

இரு கிழமைகளில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

 'டித்வா' சூறாவளியை அடுத்து டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 93 ஆயிரத்துக்கும் (93,000) மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா மேம்பாட்டு மையத்தின்  கூற்றுப்படி, டிசம்பர் 01 முதல் 14 ஆம் திகதி வரை 93,031 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.

மேலும், ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இரு கிழமைகளில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகை | 93000 Tourists Visited Sri Lanka In The Two Weeks

அதன்படி, ஜனவரி 01 முதல் டிசம்பர் 14, வரை இலங்கைக்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,196,624 ஆக உள்ளது என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு மையம் மேலும் தெரிவித்துள்ளது.