18 மாடிக் கட்டிடத்தில் காத்திருந்த அதிர்ச்சி ; தீவிர விசாரணையில் பொலிஸார்

18 மாடிக் கட்டிடத்தில் காத்திருந்த அதிர்ச்சி ; தீவிர விசாரணையில் பொலிஸார்

காலியில் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓலகம பிரதேசத்தில் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும் 18 மாடிகள் உடைய கட்டிடம் ஒன்றின் 15 ஆவது மாடியில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (2) பிற்பகல் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தசவித தகவல்களும் கிடைக்கவில்லை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

18 மாடிக் கட்டிடத்தில் காத்திருந்த அதிர்ச்சி ; தீவிர விசாரணையில் பொலிஸார் | Shock Awaited At 18 Storey Building

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், நேற்று (02) பிற்பகல் வேளையில் இது குறித்து தெரியவந்துள்ளது.

சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அம்பலங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.