இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவாகும் தலைகீழ் மாற்றம்
தங்க விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (08.01.2026) 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை தங்க சந்தையில் கடந்த திங்கட்கிழமை முதல் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான வீழ்ச்சி பதிவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 359000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,188 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

2025 வருட இறுதிப்பகுதி முதல் இலங்கையில் தங்கத்தின் விலையில் தொடர் அதிகரிப்பு பதிவாகியிருந்தது. இவ்வாறான சூழலில் அண்மைய சில நாட்களாக தலைகீழ் மாற்றம் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.