புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாட்டால் ஆண்டுதோறும் சுமார் 22000 பேர் உயிரிழப்பு
இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாட்டால் ஆண்டுதோறும் சுமார் 22000 பேர் உயிரிழப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்படும் மொத்த மரணங்களில் 83% தொற்றாத நோய்களால் ஏற்படுகின்றன என்றும், அவற்றிற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக புகையிலை பயன்பாடு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் சுமார் 15 இலட்சம் பெரியவர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர்.
இந்த நிலையில், உலகளவில் ஒவ்வொரு ஆறு விநாடிகளுக்கும் ஒரு புகையிலை தொடர்பான மரணம் பதிவாகிறது என தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகார சபையின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர், 2021ஆம் ஆண்டிற்கு பின்னர் சிகரெட்டுகளுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும், இது புகையிலை கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.