இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் 6G தொழில்நுட்பம்
இலங்கையின் டிஜிட்டல் தளத்தில் அதிநவீன ஆராய்ச்சி முயற்சிகளில் ஒன்றான 6Gயின் முன்னுரிமை திட்டம் (sixth-generation) network அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்லாந்தின் ஒலு Oulu பல்கலைக்கழகம் மற்றும் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் Indian Institute of Technology (IIT) ஆகியவற்றின் பிரதிநிதிகள் (07ஆம் திகதி ) நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன ஆகியோருடன் கலந்துரையாடினர்.
சர்வதேச கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் புதுமைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இலங்கையில் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவுதல் உள்ளிட்ட பல திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மேலும், இலங்கையின் டிஜிட்டல் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், நாட்டை அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுக்கான பிராந்திய மையமாக நிலைநிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

Oulu பல்கலைக்கழகத்தின் 6G முன்னுரிமை திட்டம் மற்றும் சென்னை ndian Institute of Technology (IIT) இன் புதுமை அமைப்பு உள்ளிட்ட அதிநவீன ஆராய்ச்சி முயற்சிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டன.
புதிய கண்டுபிடிப்புகள் மேம்படுத்துதல், உலகளாவிய கூட்டாண்மைகளை வளர்ப்பது மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மறுமளர்ச்சிக்கு ஆதரிப்பது ஆகியவற்றின் முதல் படிமுறையின் அடுத்த கட்ட நகர்வுகளின் ஆரம்பமாக அமையவுள்ளது.