யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் : பரிதாபகரமாக பறிபோன குடும்பஸ்தர் உயிர்

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் : பரிதாபகரமாக பறிபோன குடும்பஸ்தர் உயிர்

யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம்(19) உயிரிழந்துள்ளார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த அன்னலிங்கம் அஜந்தன் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை இரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் : பரிதாபகரமாக பறிபோன குடும்பஸ்தர் உயிர் | Family Member Dies Of Rat Fever In Jaffna

இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். அவர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.